fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளன

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2019 12:37

கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளன

நீர்க்குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் காரணமாக கொழும்பின் சில வீதிகள் மூடப்படவுள்ளன. கிரேண்ட்பாஸ் மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் நீர்க்குழாய் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதற்கமைய இன்றிரவு 10 மணியிலிருந்து எதிர்வரும் 14 ம் திகதி காலை 5 மணி வரை தொட்டலங்க சந்தி, மகாவத்த சந்தி ஊடாக மாதம்பிட்டிய வரையான வீதி மூடப்படவுள்ளது.

எதிர்வரும் 18 ம் திகதி இரவு 10 மணி முதல் ஒக்டோபர் மாதம் 21 ம் திகதி காலை 5 மணி வரையிலும், அதனையடுத்து 25 ம் திகதி இரவு 10 மணிமுதல் ஒக்டோபர் மாதம் 28 ம் திகதி காலை 5 மணி வரையும் மீண்டும் வீதி மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர். இதேவேளை வாசல வீதி சந்தி மற்றும் வோல்ட் சந்தி ஊடாக சிரில் சிறி பெரேரா மாவத்தையும் மூடப்படவுள்ளது.

இன்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 14 ம் திகதி காலை 5 மணி வரையும் 18 ம் திகதி இரவு 10 மணியிலிருந்து 21 ம் திகதி காலை 5 மணிவரையும் வீதி மூடப்பட்டிருக்கும்.

இதேவேளை ஒக்டோபர் 25 ம் திகதி இரவு 10 மணி முதல் ஒக்டோபர் 28 ம் திகதி காலை 5 மணிவரையும் வீதி மூடப்பட்டிருக்கும்.

இதேவேளை பலாமரச்சந்தியிலிருந்து சென் ஜோஷப் வரையான பகுதியும் தற்காலிகமாக மூடப்படவுள்ளது. நாளை மறுதினம் இரவு 10 மணி முதல் ஒக்டோபர் 13 ம் திகதி காலை 5 மணி வரை வீதி மூடப்பட்டிருக்கும். இந்நிலையில் வாகன சாரதிகள் மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 11, 2019 12:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க