அரசியல் செயற்பாடுகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம் : கட்சிகளுக்கு அறிவுரை
Related Articles
அரசியல் செயற்பாடுகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அனைத்து கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. சிறுவர்களை பல்வேறு நடவடிக்கைகளுக்கென அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவது தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்தகைய சம்பவங்கள் தொடர்பில் 1929 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடிதம், பெக்ஸ் மற்றும் மின்னஞ்சலின் ஊடாகவும் தகவல்களை முன்வைக்க முடியுமென அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அனோமா சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.