fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட 6 சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2019 12:18

கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட 6 சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை மற்றும் சகோதரர்கள் உள்ளிட்ட 6 சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 16 ம் திகதிவரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெல விளக்கமறியலில் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பூஷ்ஷ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிப்பானை இம்ரானை பார்வையிடுவதற்கு வருகை தந்த அவரது உறவினர்களிடமிருந்த சந்தேகத்திற்கிடமாக பொதியொன்று பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. அதில் இரு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இரண்டு சார்ஜர்கள் என்பன கைப்பற்றப்பட்டன. இதனையடுத்தே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2019 12:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க