புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று பிற்பகல் காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளது. இதேவேளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாப்பாய ராஜபக்ஷவின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.