அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு போதைப்பொருள் எடுத்துச்செல்ல முற்பட்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிறைக்கைதியொருவரை பார்வையிட சென்றவரே இவ்வாறு போதைப்பொருள் எடுத்துவந்துள்ளார்.
ஆடைப்பையில் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலை பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.