fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக அஞ்சல் தினம் இன்றாகும்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2019 11:20

உலக அஞ்சல் தினம் இன்றாகும்

புதிய தபால் இலட்சினையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இன்றையதினம் அனுஷ்டிக்கப்படுகின்ற உலக தபால் தினத்தை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய தபால் இலட்சினைக்கு பதிலாக தற்காலத்திற்கு பொருந்தக்கூடிய வகையில் இலட்சினை அறிமுகப்படுத்தப்படுமென தபால் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார். உலக தபால் தினத்தை முன்னிட்டு தபால் தலைமையக வளாகத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இன்றையதினம் தபால் தினத்திற்கான நினைவு தபால் முத்திரை வெளியீடு சர்வதேச தரம் வாய்ந்த முத்திரையொன்றை வெளியிடுதல், தபால் திணைக்களத்தால் நடத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்குதல் ஆகியன இடம்பெறவுள்ளன.

இன்றையதினம் இதுவரை இருந்த தபால் கீதம் மாற்றப்பட்டு புதிய கீதம் அறிமுகப்படுத்தப்படுகிறது. முக்கிய அம்சமாக இதுவரை புறா வடிவத்தை உள்ளடக்கி அமையப்பெற்றிருந்த தபால் இலட்சினை சர்வதேச தர்திற்கமைய மாற்றப்பட்டு புதிய இலட்சினையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு தபால் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 9, 2019 11:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க