ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கென ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலயமைப்பை பிரதிநித்துவப்படுத்துகின்ற 35 பேர் வருகை தரவுள்ளதாக பெவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பெவ்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கருத்து தெரிவிக்கையில் :
“இம்முறை ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பு, பெவ்ரல் அமைப்பு என்பனவற்றை பிரதிநித்துவப்படுத்துகின்ற ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பை சேர்ந்த 35 பேர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். தற்போது, இவர்கள் ஆரம்ப கட்ட நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளனர். அடுத்த வாரத்திற்குள் இவர்களில் 10 பேர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இம்முறை தேர்தலின் போது ஐரோப்பிய சங்கத்தினரும் பொதுநலவாய அமைப்பின் பிரதிநிதிகளின் வருகை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கென இவர்களின் பங்களிப்பும் எதிர்காலத்தில் க்pடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள அனைவருடனும் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளை நடாத்த பெவ்ரல் அமைப்பு திட்டமிட்டுள்ளது. “ என தெரிவித்தார்.