ஈராக்கின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெறுகின்ற ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக மாறியுள்ளன. மோதல்களில் 110 இற்கும் கூடுதலானோர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது. 6 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் காயமடைந்துள்ளனர். ஈராக் பாதுகாப்பு தரப்பினருக்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களிலேயே இவர்கள் காயமடைந்தனர்.
ஈராக் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இதுவாகும். அரசாங்கம் மக்களுக்கு வழங்குகின்ற நிவாரணங்ககளை குறைத்தல், தொழில் இன்மை நிதி நெருக்கடி மற்றும் பாதுகாப்பு என்பனவற்றை அடிப்படையாக வைத்தே இவ்வார்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. பக்தாத் உள்ளிட்ட பல நகரங்களில் இடம்பெறுகின்ற இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.