தடைசெய்யப்பட்ட அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கையர்கள் நால்வர் லண்டன் லூட்டான் விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் பொலிஸ் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அவர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். குறித்த நான்கு இலங்கையர்களிடமும் பிரித்தானிய பயங்கரவாத ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையர்கள் நால்வர் லண்டனில் கைது
படிக்க 0 நிமிடங்கள்