fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஊவா மாகாண சபையின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2019 11:42

ஊவா மாகாண சபையின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

ஊவா மாகாணத்தின் 6 ஆவது மாகாண சபையின் உத்தியோகபூர்வ கால எல்லை இன்று (8) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைகின்றது. கடந்த 5 வருட காலப்பகுதியில் இந்த மாகாணசபையில் 5 ஆளுநர்களும், 3 முதலமைச்சர்களும் இந்த மாகாண சபையை முன்னெடுத்துள்ளனர். கடந்த மாகாண சபை தேர்தல் பெறுபேறிற்கு அமைவாக 34 உறுப்பினர்களுடன் 2 போணஸ் அங்கத்தவர்களைக் கொண்டதாக இது அமைந்திருந்தது. இதில் 19 உறுப்பினர்கள் கூட்டமைப்பிற்கு உட்பட்டவர்களாவர். ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 13 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் 2 உறுப்பினர்களும் இந்த மாகாண சபையில் இடம்பெற்றிருந்தனர். சஸீந்திர ராஜபக்ஷ, ஹரின் பெர்னான்டோ ஆகிய முதலமைச்சர்களுக்கு பின்னர் 6 ஆவது ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க பதவி வகுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2019 11:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க