இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி பிரிஸ்பேர்னில் இடம்பெற்று வருகிறது. நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது. அதற்கமைய 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து, 282 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ரச்சேல் ஹைனெஸ் 118 ஓட்டங்களையும், எலிஸ்ஸா ஹிலே 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் அச்சினி குலசூரிய 3 விக்கட்டுகளையும், சுகந்திகா குமாரி மற்றும் சஷிகலா சிறிவர்தன ஆகியோர் தலா இவ்விரு விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். அதற்கமைய 283 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை மகளிர் அணி , சற்றுமுன்னர் வரை 38 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து, 145 ஓட்டங்களை பெற்றுள்ளது.