கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை 24 மணித்தியாலத்திற்கு நீர் வெட்டு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 7, 2019 12:52

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை 24 மணித்தியாலத்திற்கு நீர் வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை 24 மணித்தியாலத்திற்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. நாளை காலை 8.00 மணி தொடக்கம் நாளை மறுநாள் காலை 8.00 மணி வரையில் நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளது. திருத்தப் பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய பேலியகொடை, வத்தளை, மாபோல, யாஎல மற்றும் கட்டுநாயக்க, சீதுவ நகரசபை பிரதேசம், களனி, வத்தளை, பியகம, மஹார, தொம்பே மற்றும் யாஎல பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும், கம்பாஹா பிரதேச சபை பகுதியில் ஒரு பிரதேசத்திலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 7, 2019 12:52