fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரச ஊழியர்கள் தொடர்ச்சியாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 7, 2019 10:25

அரச ஊழியர்கள் தொடர்ச்சியாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் அரச ஊழியர்கள் தொடர்ச்சியாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. பல தொழிற்ச்சங்க நடவடிக்கைகள் வேட்புமன அறிவிப்பதற்கு முன்னரும், வேட்புமனு அறிவிப்பதற்கு பின்னரும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில கைவிடப்பட்டுள்ளன. எனினும் ரயில் தொழிற்ச்சங்கங்களின் பணிபகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு அரசு ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசியம். இதனால் தொழிற்ச்சங்க பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரச ஊழியர்கள் முன் வரவேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். இதனால் தேர்தல் காலத்தில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 7, 2019 10:25

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo