எதிர்வரும் 5 வருடங்களில் 500 பில்லியன் ரூபா முதலீடு செய்ய அரசாங்கம் தயாராகவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஏற்றுமதியை இலக்காக கொண்ட டிஜிட்டல் பொருளாதாரத்தினூடாக துரித அபிவிருத்தி பாதையை நோக்கி பயணிக்க முடியும். இதற்கு முறையான மறுசீரமைப்பை அடிப்படையாக கொண்டு செயற்படவேண்டும்.
இவ்வாறான எதிர்கால பயணத்தினூடாக, 2030ம் ஆண்டளவில் கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த முடியுமென பிரதமர் தெரிவித்தார். தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கென இலங்கை வர்த்தக சபை தயாரித்துள்ள யோசனைகள் தொடர்பில் அலரி மாளிகையில் இன்றைய தினம் ஆராயப்பட்டது. இதன்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.