fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எதிர்வரும் திங்கள் கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுற கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகள் மூடப்படும்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2019 13:01

எதிர்வரும் திங்கள் கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுற கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகள் மூடப்படும்

எதிர்வரும் திங்கள் கிழமை அதாவது 7ம் திகதி கொழும்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மூன்று பிரிவுகளுக்குட்பட்ட சகல பாடசாலைகள் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுற கல்வி வலயத்திற்குட்பட்ட மூன்று பாடசாலைகளும் மூடப்படும். ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்புமனு ஏற்றுக்கொள்வதை முன்னிட்டே இத்தீர்மானம் எட்டப்பட்டது.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தினத்தில் கொழும்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பொரளை, கொழும்பு தெற்கு மற்றும் மத்திய கொழும்பு ஆகிய பிரிவுகளுக்குரிய சகல பாடசாலைகளும் ஸ்ரீ ஜயவர்தனபுற வலயத்திற்குட்ட ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரி, ஹேவா விதாரன கல்லூரி மற்றும் ஹேவா விதாரன மாதிரி கனிஷ்ட பாடசாலை என்பன மூடப்படும். இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் தினத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜகிரிய சரண மாவத்த உள்ளிட்ட ஒருசில வீதிகள் மூடப்படும். தமது வேட்பாளர்களுடன் தேர்தல்கள் செயலகத்திற்கு வருகை தருகின்ற கட்சி செயற்பாட்டாளர்களுக்கு என வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு ராஜகிரிய முச்சந்தி மற்றும் அண்டிய பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் ஆகும்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2019 13:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo