fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

“எனது மனைவிக்கு எதிரான ஈவு இரக்கமற்ற நடவடிக்கை” : இளவரசர் ஹாரி வருத்தம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2019 11:37

“எனது மனைவிக்கு எதிரான ஈவு இரக்கமற்ற நடவடிக்கை” : இளவரசர் ஹாரி வருத்தம்

இங்கிலாந்தின் ‘மெயில் ஆன் சண்டே’ பத்திரிகை இளவரசி மேகன் அவரது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை அவரின் அனுமதியில்லாமல் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ‘மெயில் ஆன் சண்டே’ நிறுவனத்தின் மீது இளவரசி மேகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதற்கிடையில் இளவரசர் ஹாரி, “தனியார் பத்திரிகையின் இந்த செயல் எனது மனைவிக்கு எதிரான ஈவு இரக்கமற்ற நடவடிக்கை” என கூறி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஊடகங்களின் பெரும் தொல்லையினாலேயே தனது தாயாரும், இளவரசியுமான டயானா பாதிக்கப்பட்டதாகவும், அதே போன்று வரலாறு மீண்டும் திரும்பிவிடுமோ என்பதே தனது மிகப்பெரிய அச்சம் என்றும் அவர் கூறினார். இதுபற்றி அவர் கூறுகையில், “அப்போது எனது தாயாரை இழந்தேன். இப்போது அதே சக்திகளால் எனது மனைவி பாதிக்கப்படுவதை கண்கூடாக பார்க்கிறேன்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 4, 2019 11:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க