fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆப்கானஸ்தானின் பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2019 12:58

ஆப்கானஸ்தானின் பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு

ஆப்கானஸ்தானின் பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தலிபான் அமைப்புக்கும் பாதுகாப்பு பிரிவுக்குமிடையில் அவ்வப்போது மோதல் இடம்பெறுகின்றது. கடந்த சில வருடங்களாக குறித்த இரு தரப்புக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர்கள் 45 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இதேவேளை சமாதான பேச்சுவார்த்தைக்கு தலிபான் இணங்க மறுக்கும் பட்சத்தில் தாக்குதல்கள் தொடருமென ஆப்கானிஸ்தான் எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2019 12:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க