fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கோட்டாபயவின் இலங்கை குடியுரிமை தொடர்பான மனு மீதான விசாரணை ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2019 12:28

கோட்டாபயவின் இலங்கை குடியுரிமை தொடர்பான மனு மீதான விசாரணை ஆரம்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பான மனுமீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றுவருகிறது. மேன்முறையீட்டு நீதிபதிகளாக யஷந்த கோதாகொட, அர்ஜுன ஒபேசேகர மற்றும் மஹிந்த சமயவர்த்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று காலை விசாரணைகள் ஆரம்பமானது.

பேராசிரியர் ச்சந்திரகுப்த தேனுவர மற்றும் காமினி வியாங்கொட ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனுவில் பிரதிவாதிகளாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட பலர் பெயரிடப்பட்டுள்ளனர். கோட்டாபய ராஜபக்ஷ முறையான குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்காமல் இந்நாட்டில் வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையை பெற்றுள்ளதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் குறித்த அனுமதிப்பத்திரங்களை ரத்துச்செய்ய உத்தரவிடுமாறு மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரியுள்ளனர். அதற்கமைவாகவே இம்மனு மீதான விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆரம்பமானது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2019 12:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க