பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அடிப்படையில் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுக்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ம் திகதி இடம்பெறவுள்ளது.
அரசியலமைப்பின் 12வது பிரிவின் முதலாவது வாக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்தது. அதற்கமைவாகவே இம்மனு மீதான விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புசெயலாளர் உள்ளிட்ட பிரதிவாதிகளை அடுத்த வழக்கு தவணையின் போது ஆஜராகுமாறும் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.