ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட இரு பேச்சுவார்த்தைகள்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2019 12:21

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட இரு பேச்சுவார்த்தைகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசேட பேச்சுவார்த்தையொன்றும் பிற்பகல் 2 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை இன்று மாலை 4 மணிக்கு மற்றுமொரு பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கட்சி தலைவர்களுக்குமிடையில் இப்பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறை, ஊடக கையாளுகை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2019 12:21

Default