fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தொழிற்சங்க பணிப்புறக்கணிப்புகளை தவிர்க்க நாளை அமைச்சரவை பத்திரம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2019 12:27

தொழிற்சங்க பணிப்புறக்கணிப்புகளை தவிர்க்க நாளை அமைச்சரவை பத்திரம்

பல்வேறு தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வருகின்ற பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை நிறுத்துவதற்கு அமைச்சரவை உபகுழு கூடி விசேட பேச்சுவார்த்தையொன்றை நடத்தவேண்டுமென இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். இப்பேச்சுவார்த்தையின் போது தொழிற்சங்க தலைவர்களும், அதன் பிரதிநிதிகளும் இணைத்துக்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஹர்ச டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இன்றையதினம் நிதியமைச்சில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் இராஜாங்க அமைச்சர்களான அசோக் அபேசிங்க, எரான் விக்ரமரத்ன ஆகியோரும் நானும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதன்போது இருதரப்பிலிருந்தும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

நாளையதினம் இதுதொடர்பான அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக நாங்கள் அவர்களுக்கு உறுதியளித்தோம். இதனூடாக இப்பிரச்சினை முடிவுக்கு வருமென எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 1, 2019 12:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க