6 ஆயிரத்து 480 கிலோ கிராம் கழிவுத்தேயிலையுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது

6 ஆயிரத்து 480 கிலோ கிராம் கழிவுத்தேயிலையுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது 0

🕔13:18, 1.செப் 2019

6 ஆயிரத்து 480 கிலோ கிராம் கழிவுத்தேயிலையுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நிட்டம்புவ பிரதேசத்தில் லொறியொன்றை நிறுத்தி, சோதனைக்குட்படுத்தியபோதே சந்தேக நபர்கள் கைதானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் இன்றைய தினம் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Read Full Article
சகல அரச பாடசாலைகளும் நாளை திறப்பு

சகல அரச பாடசாலைகளும் நாளை திறப்பு 0

🕔13:09, 1.செப் 2019

கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இடம்பெறும் பாடசாலைகளை தவிர்ந்த ஏனைய சகல அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணைக்காக நாளைய தினம் திறக்கப்படவுள்ளன. உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 11 பாடசாலைகளில் இடம்பெறுகின்றன. குறித்த பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 16ம் திகதி மூன்றாம் தவணைக்காக திறக்கப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Read Full Article
48 நாடுகளுக்கான இலவச வீசா வசதி ஜனவரி மாதம் வரை நீடிப்பு

48 நாடுகளுக்கான இலவச வீசா வசதி ஜனவரி மாதம் வரை நீடிப்பு 0

🕔13:04, 1.செப் 2019

48 நாடுகளுக்கான இலவச வீசா வசதிகளை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் வரை நடைமுறையில் இருக்குமென குடிவரவு, குடியல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு மாத காலமாக இலவச வீசா வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அரசாங்கத்தின் சுற்றுலா மேம்பாட்டு வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக இலவச

Read Full Article
சிரியாவின் வடமேல் பகுதியில், அமெரிக்கா வான்வழி தாக்குதல்

சிரியாவின் வடமேல் பகுதியில், அமெரிக்கா வான்வழி தாக்குதல் 0

🕔13:04, 1.செப் 2019

சிரியாவின் வடமேல் பகுதியில், அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. தாக்குதலில் பயங்கரவாதிகள் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அல்குவைதா பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் காணப்படும் பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கான பொறுப்பை அமெரிக்கா ஏற்கவேண்டுமென அல்குவைதா அமைப்பினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி

Read Full Article
வலி கட்டுப்பாட்டு தாதியர் பயிற்சி முதற்தடவையாக நாளைய தினம் ஆரம்பம்

வலி கட்டுப்பாட்டு தாதியர் பயிற்சி முதற்தடவையாக நாளைய தினம் ஆரம்பம் 0

🕔13:04, 1.செப் 2019

வலி கட்டுப்பாட்டு தாதியர் பயிற்சி முதற்தடவையாக நாளைய தினம் இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. சர்வதேச தரத்திற்கமைய பயிற்சிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாவது பயிற்சி குழுவுக்கென 40 தாதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு நாளை முற்பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கேட்போர்

Read Full Article
3ம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

3ம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் 0

🕔12:57, 1.செப் 2019

இன்றைய தினம் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் சகல பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 42 ஆயிரத்துக்கும் அதிக டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே

Read Full Article

Default