அபிவிருத்தியில் புதியதோர் அத்தியாயம்

அபிவிருத்தியில் புதியதோர் அத்தியாயம் 0

🕔18:02, 29.செப் 2019

அபிவிருத்தியில் புதியதோர் அத்தியாயம் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (28) பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்ச்சித்திட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஓய்வு பெறுவதற்கு தனக்கு எவ்வித தேவையும் இல்லை என்றும், நாட்டு மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு தான் சிறந்த தேகாரோக்கியத்துடன்

Read Full Article
தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 28 பேர் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 28 பேர் கைது 0

🕔17:46, 29.செப் 2019

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 28 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர்கள் கைதானதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். உப்பாறு மற்றும் ப்ளக்துடுவ பிரதேசத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5 டிங்கி படகுகள் மற்றும் தடை செய்யப்பட்ட 4 வலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட

Read Full Article
எப்பாவல ரத்தொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு

எப்பாவல ரத்தொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு 0

🕔17:14, 29.செப் 2019

இகலவௌ – அதிரானி வீதி, எப்பாவல ரத்தொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நபர் ஒருவர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த நபர் எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Read Full Article
அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ஆராயும் அமைச்சரவை இணைகுழு நாளை கூடுகிறது

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ஆராயும் அமைச்சரவை இணைகுழு நாளை கூடுகிறது 0

🕔16:10, 29.செப் 2019

அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைகுழு நாளை கூடவுள்ளது. இதன்போது பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குழுவின் உறுப்பினர், பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நிதியமைச்சு தலைமையில் குறித்த அமைச்சரவை இணைகுழு ஒன்றுகூடியது. நாளை பிற்பகல் 2 மணிக்கு அனைத்து தொழிற்சங்களின் பங்கேற்புடன்

Read Full Article
நாளை நள்ளிரவு முதல் தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் நிறைவு

நாளை நள்ளிரவு முதல் தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் நிறைவு 0

🕔15:44, 29.செப் 2019

ஜனாதிபதி தேர்தலுக்கென தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அனுப்பாதவர்கள், அருகிலுள்ள மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் அவற்றை கையளிக்குமாறு தேர்தல்கள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. நாளை நள்ளிரவு 12 மணியுடன் தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் நிறைவடைகின்றன. ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கான வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணிகள் அடுத்த மாதம் 7ம்

Read Full Article
தாக்குதல்கள் மற்றும் வன்முறை அச்சத்திற்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு

தாக்குதல்கள் மற்றும் வன்முறை அச்சத்திற்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு 0

🕔15:39, 29.செப் 2019

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் மில்லியன் கணக்கானோர் தமது வாக்குகளை பதிவுசெய்துள்ளனர். தாக்குதல்கள் மற்றும் வன்முறை அச்சத்திற்கு மத்தியில் அந்நாட்டு மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் நான்காவது ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அஷ்ரப் கானி போட்டியிடுகிறார். அவர் உட்பட 15 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் பெண்ணொருவர் கைது

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் பெண்ணொருவர் கைது 0

🕔15:39, 29.செப் 2019

சட்டவிரோத மதுபான போத்தல்களுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய மீகொட 20ம் தூண் பகுதியில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவரிடமிருந்து 8 ஆயிரம் லீட்டர் மதுபானம், இரண்டாயிரத்து 300 லீட்டர் கோடா உள்ளிட்ட பொருட்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபர் பாதுக்க பகுதியைச் சேர்ந்த 64 வயதா னவரென தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஹோமாகம நீதவான் நீதிமன்றில்

Read Full Article
சட்டவிரோதமாக நாட்டுக்குள் குடியேற முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக நாட்டுக்குள் குடியேற முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைது 0

🕔15:35, 29.செப் 2019

சட்டவிரோதமாக நாட்டுக்குள் குடியேற முற்பட்ட இருவர், கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் ஊருமலை கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த படகை சோதனையிட்டபோது, அதில் பயணித்த இருவரும் கைதாகியுள்ளனர். அவர்கள் கடல்மார்க்கமாக இந்தியாவிலிருந்து நாட்டுக்குள் வர முயற்சித்துள்ளனர். அவர்கள் கடந்த 2008ம் ஆண்டில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய இலங்கையர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது. இந்நிலையில் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்கென தலைமன்னார்

Read Full Article
இலங்கை அமைதிப்படையினர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை

இலங்கை அமைதிப்படையினர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை 0

🕔15:31, 29.செப் 2019

இலங்கை அமைதிப்படையினர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவினாத் ஆரியசிங்க, ஐக்கிய நாடுகள் சமாதான செயற்பாடுகள் பணியகத்தின் உப செயலாளரை நாளை சந்திக்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கை இராணுவப்பிரிவையும், மேலும் சில அதிகாரிகளையும் இலங்கைக்கு திருப்பியனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய

Read Full Article
பிலிப்பைன்சின் தென்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சின் தென்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 0

🕔15:04, 29.செப் 2019

பிலிப்பைன்சின் தென்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளதென அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்பகுதியிலுள்ள டாவோ மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. டாவோ மாகாணத்திலிருந்து, 126 கிலோ மீற்றர் தூரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை

Read Full Article

Default