fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொதுப்போக்குவரத்து சேவையை சக்திப்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2019 13:09

பொதுப்போக்குவரத்து சேவையை சக்திப்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம்

பொதுப்போக்குவரத்து சேவையை சக்திப்படுத்துவதற்கான புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல்மாகாண மார்க்கங்களில் புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. அனுமதிச்சீட்டு வழங்காமை மற்றும் அனுமதிச்சீட்டு பெற்றுக்கொள்ளாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த தவறுகளை மேற்கொள்ளும் நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகார சபையின் தலைவர் துசித குலரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள பஸ்சேவைகள் பலவற்றில் காலஅட்டவணை பின்பற்றப்படாமை தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய அனைத்து மார்க்கங்களிலும் விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளளது.

இதேவேளை அலுவலக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஒருசில பஸ் வண்டிகளிலும் பணம் அறவிடப்படுகின்றமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துசித குலரத்ன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2019 13:09

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க