fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுதந்திர கட்சி கூட்டணி குறித்த ஜனாதிபதியின் கருத்து

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2019 12:50

சுதந்திர கட்சி கூட்டணி குறித்த ஜனாதிபதியின் கருத்து

கொள்கை மற்றும் கட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவும் தான் தயாரில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சியின் மாவட்ட கூட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் குருநாகல் மாவட்ட கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொதுசின்னமொன்றில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு பொதுஜன பெரமுனவுடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணி அமைக்க இணக்கம் வெளியிட்டால் மாத்திரமே அது சாத்தியப்படுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ , கோட்டாப்ய ராஜபக்ஷ , பெஷில் ராஜபக்ஸ ஆகியோருடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. பொதுசின்னமொன்றில் கோட்டாப்ய ராஜபக்ஷ போட்டியிடுவாராயின் அவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். அவ்வாறன்றி மொட்டு கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராகயில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2019 12:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க