fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தொழிற்ச்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் சில அலுவலக ரயில்கள் சேவையில்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2019 12:06

தொழிற்ச்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் சில அலுவலக ரயில்கள் சேவையில்

தொழிற்ச்சங்க நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் 10 ரயில்கள் இன்று முற்பகல் சேவையில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் விசேட பஸ் சேவைகளை முன்னெடுப்பது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஓய்வுபெற்ற ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் 20க்கும் அதிகமானோர் நாளாந்த ஊதியத்தின் அடிப்படையில் சேவையில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை மஹவ, குருநாகல், சிலாபம், காலி, கண்டி, ரம்புக்கனை மற்றும் அவிஸ்ஸவாளை ஆகிய பகுதிகளிலிருந்து 6 ரயில்கள் கொழும்பு கோட்டை வரை பயணிப்பதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2019 12:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க