fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2019 12:03

சீன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலி

சீன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் நிங்காய் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இடம்பெற்றுள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழிற்சாலையின் ஒரு பகுதி முதலில் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

இதனையடுத்து அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் தொழிற்ச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். தீ வேகமாகப் பரவியதால், சிலர் தீக்காயங்களுக்கு உள்ளானதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு வீரர்கள் துரித கதியில் செயற்ப்பட்டமையால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் சீன பாதுகாப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2019 12:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க