‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய 2 பிரமாண்டமான படங்களில் கதாநாயகனாக நடித்தவர் பிரபாஸ், இதன் மூலம் தெலுங்கு பட உலகில் பிரபாசின் அந்தஸ்து பல மடங்கு உயர்ந்தது. இந்நிலையில் அவர், ‘சாஹோ’ என்ற மற்றொரு பிரமாண்டமான படத்தில் நடித்தார்.
சமீபத்தில் திரைக்கு வந்த ‘சாஹோ’ படம், தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் படுதோல்வி அடைந்தது. ஆனால், இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ‘சாஹோ’ வெற்றி பெற்றது. ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. ‘சாஹோ’ படத்துக்காக கதாநாயகன் பிரபாஸ் ரூ.70 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.