தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 28 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர்கள் கைதானதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். உப்பாறு மற்றும் ப்ளக்துடுவ பிரதேசத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5 டிங்கி படகுகள் மற்றும் தடை செய்யப்பட்ட 4 வலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 28 பேர் கைது
படிக்க 0 நிமிடங்கள்