கொக்கேய்ன் மாத்திரைகளுடன் நாட்டுக்குள் வருகைதந்த பிரேசில் நாட்டு பெண்ணொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் 52 கொக்கேய்ன் மாத்திரைகளை விழுங்கிய நிலையில் நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட அவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவரின் வயிற்றிலிருந்து 52 கொக்கேய்ன் மாத்திரைகளும் எடுக்கப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் டோஹா கட்டாரிலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.