fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2019 12:03

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

2015 முதல் 2018 வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள ஊழல் மோசடிகளை கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி நியமித்த விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் நேற்று மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கையளிக்கப்பட்டது. 2015 ஜனவரி 15ம் திகதி முதல் 2018 டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையான காலப்பகுதிக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கருதப்படுகின்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக கண்டறிவதற்கு இவ்வாணைக்குழு நியமிக்கப்பட்டது. ஓய்வு பெற்றுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரட்னவின் தலைமையில் இவ்வாணைக்குழு இயங்கியது.

ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜனி குசலா வீரவர்தன ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் பஸ்துன் கோரளே ஆராச்சிகே பிரேமதிலக்க அமைச்சின் ஓய்வுபெற்ற செயலாளர் லலித் ஆர்.டி சில்வா மற்றும் ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மாஅதிபர் எம்.கே.டி விஜயஅமரசிங்க ஆகியோர் இவ்வாணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் ஆவர். குறித்த காலப்பகுதிக்குள் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற ஊழல் மோசடிகள், நம்பிக்கைக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள், அரசியல் முறைக்கேடுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பக்கச்சார்பின்றி விரிவான விசாரணைகளை மேற்கொள்வதே இவ்வாணைக்குழுவிடம் பொறுப்பளிக்கப்பட்ட பணியாகும். இவ்வருடம் ஜனவரி 17ம் திகதி இவ்வாணைக்குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2019 12:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க