மணிரத்னம் இயக்கவுள்ள புதிய படம் பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கல்கியின் வரலாற்று புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்க திட்டமிட்டுள்ளார். இதில் பிரபல நடிகர் மற்றும் நடிகையர்கள் பட்டாளம் இணையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஆகிய இருவர் மட்டுமே இதை உறுதிசெய்துள்ளனர். சமீபத்தில் நடிகர் பார்த்திபனும் டுவிட்டர் பக்கத்தில் அவர் நடிப்பதாக அறிவித்தார். அதன் பின்னர் ஜெயராம், அமலா பால் ஆகியோரும் படத்தில் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தினர் இதில் ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் அவர் இரண்டு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.