fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிம்பாபே தொடரை இரத்து செய்து இலங்கையுடனான கிரிக்கட் தொடரை அறிவித்தது இந்தியா

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2019 12:55

சிம்பாபே தொடரை இரத்து செய்து இலங்கையுடனான கிரிக்கட் தொடரை அறிவித்தது இந்தியா

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள 20 – 20 தொடருக்கான அட்டவணையை இந்திய கிரிக்கட் சபை வெளியிட்டுள்ளது. இந்திய அணி ஜனவரி மாதம் சிம்பாபேயிற்கு விஜயம் மேற்கொண்டு 20 – 20 தொடரில் விளையாடுமென ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டது. எனினும் சிம்பாபே அணியின் சர்வதேச அங்கீகாரத்தை சர்வதேச கிரிக்கட் சபை தற்காலிகமாக இரத்து செய்துள்ளது. இதனையடுத்து சிம்பாபே அணிக்கு எதிரான தொடரை இந்திய கிரிக்கட் சபை நிறுத்தியுள்ளது.

இதற்கு பதிலாக இலங்கை அணியை அடுத்த வருடம் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வருகை தந்து விளையாடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கத்திற்கு அமைய இலங்கை அணி இந்தியாவுக்கு சென்று மூன்று 20 – 20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. முதல் போட்டி ஜனவரி 5 ம் திகதியும் இரண்டாம் போட்டி ஜனவரி 7 ம் திகதியும் மூன்றாவது போட்டி ஜனவரி 10 ம் திகதியும் நடைபெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2019 12:55

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க