fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பகிஷ்கரிப்புக்கு மத்தியிலும் சில அலுவலக ரயில்கள் சேவையில்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2019 12:52

பகிஷ்கரிப்புக்கு மத்தியிலும் சில அலுவலக ரயில்கள் சேவையில்

ரயில் சேவையாளர்களின் சம்பள பிரச்சினையினை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதென பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே ஊழியர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர்.

எனினும் அவர்கள் அமைச்சுக்கோ, ரயில்வே பொதுமுகாமையாளருக்கோ அறிவிக்கவில்லை. இது தொழிற்சங்க விதிமுறைகளை மீறும் செயற்பாடாகும். அவர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் தீர்வொன்று வழங்கப்பட்டது. அதில் பிரச்சினை இருப்பதாக அவர்கள் என்னிடமும் போக்குவரத்து அமைச்சரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். நாம் அதனை ஏற்றுக்கொண்டு நேற்று அமைச்சரவை பத்திரமொன்றையும் சமர்ப்பித்தோம். இந்த அதிகரித்த சம்பளம் ஜனவரி மாதத்திலிருந்து வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் இச்சம்பளம் அதிகரித்த நாளிலிருந்து அதனை தமது சம்பளத்தில் உள்வாங்கவேண்டுமென கோரியே இவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

இந்த பணிப்புறக்கணிப்பு உண்மையில் அசாதாரண செயலாகும். ஓய்வு பெற்று சென்றுள்ள ரயில்வே ஊழியர்களை அழைத்து சேவையினை முன்னெடுப்பதற்கு தான் ரயில்வே பொதுமுகாமையாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

எவ்வாறெனினும் சில அலுவலக ரயில்கள் இன்று காலை முதல் சேவையில் ஈடுபட்டுள்ளன. காலி, அவிசாவளை, சிலாபம், குருநாகல், கண்டி ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து கொழும்புக்கான ரயில் சேவைகள் இன்று காலை இடம்பெற்றதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை 6 ரயில்கள் சேவையில் ஈடுபட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்களின் குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதேவேளை ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன. அதேபோல் தனியார் பஸ் வண்டிகளும் அதிகளவில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோ அபேசிங்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2019 12:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க