தொடங்கொட – களனிகம தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜீப் ரக வாகனமொன்றும் லொறியொன்றும் ஒன்றோடொன்று மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் இருவருமே பெண்களென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு
படிக்க 0 நிமிடங்கள்