அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்திற்கென 12 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2019 13:14

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்திற்கென 12 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கென அரசாங்கம் 12 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. எதிர்காலத்தில் மேலும் தேவையேற்படின் தேவையான நிவாரணங்கள் வழங்கப்படுமென அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். 20 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போதுவரை மூவாயிரத்து 600 முதல் நான்காயிரம் குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இன்று மாலையாகும்போது மழைவீழ்ச்சி குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் தாம் முப்படையினர், பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் ஆகியோரை மீட்பு பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான சமைத்த உணவுகளை வழங்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2019 13:14

Default