நோயாளிகளின் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கென மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நிர்மாணிக்கப்பட்ட களுத்துறை, நாகொட பொது வைத்தியசாலையின் நிர்வாக கட்டிடம் மற்றும் வாட் தொகுதியின் முதற்கட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. 8 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள குறித்த கட்டிடத்தொகுதிக்கென இரண்டாயிரத்து 817 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்வாக கட்டிடத்திற்கு மாத்திரம் 180 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நோயாளிகளின் மருத்துவ சேவைகளை மேம்படுத்துவதற்கென மேலும் பல திட்டங்கள்
படிக்க 0 நிமிடங்கள்