fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 24, 2019 15:12

இவ்வாண்டுக்கான சிறந்த கால்பந்தாட்ட வீரராக லியனொல் மெசி தெரிவு

இவ்வருடத்திற்கான உலகின் மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரராக ஆர்ஜன்டீனாவின் லியனொல் மெசி பெயரிடப்பட்டுள்ளார். அதற்கமைய 6வது முறையாக அவர் வருடத்தின் சிறந்த கால்பந்தாட்ட வீரரென்ற விருதை பெற்றுள்ளார். சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் வருடாந்த விருது வழங்கும் விழா இத்தாலியின் மிலன் நகரில் இடம்பெற்றது.

அதற்கமைய ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதுக்கு போர்த்துக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பிரான்ஸ் வீரர் கைளியன் எம்பாப்வே மற்றும் ஆர்ஜன்டீனாவின் லியனொல் மெசி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

அதற்கமைய சர்வதேச மற்றும் கழக மட்ட போட்டிகளில் அதிக ஆற்றலை வெளிப்படுத்தியமை காரணமாக லியனொல் மெசி இவ்வாண்டுக்கான விருதை பெற்றுக்கொண்டார். ஏற்கனவே கடந்த 2009, 2010, 2011, 2012 மற்றும் 2015ம் ஆண்டுகளில் அவர் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான வருதை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 24, 2019 15:12

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க