fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரயோக பரீட்சைக்கு தோற்ற முடியாத உயர்தர மாணவர்களுக்கு மாற்று தினத்தை வழங்க தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 24, 2019 15:12

பிரயோக பரீட்சைக்கு தோற்ற முடியாத உயர்தர மாணவர்களுக்கு மாற்று தினத்தை வழங்க தீர்மானம்

சீரற்ற வானிலையால் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் அழகியல் பிரயோக பரீட்சைக்கு வருகைதர முடியாத மாணவர்களுக்கென வேறொரு தினத்தை வழங்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மழை காரணமாக சில பிரதேசங்களில் மாணவர்கள் வெள்ள அபாயத்திற்கு முகம் கொடுத்துள்ளதோடு போக்குவரத்து இடையூறுகளும் ஏற்பட்டுள்ளன.

இதனால் பரீட்சைக்கு வருகைதர முடியாமல் போனால் மாணவர்கள் 1911 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவுறுத்தியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 24, 2019 15:12

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க