fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடமாகாண பாடசாலைகளில் மாணவர் அனுமதியின் போது கட்டாயம் கல்வியமைச்சின் சுற்றுநிருபத்தை கடைப்பிடிக்க வேண்டும்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 24, 2019 15:19

வடமாகாண பாடசாலைகளில் மாணவர் அனுமதியின் போது கட்டாயம் கல்வியமைச்சின் சுற்றுநிருபத்தை கடைப்பிடிக்க வேண்டும்

வடமாகாண பாடசாலைகளில் மாணவர் அனுமதியின் போது கட்டாயம் கல்வியமைச்சின் சுற்றுநிருபத்தை கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் 35 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாதென மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பணிப்புரை விடுத்துள்ளார்.

2020ம் ஆண்டில் மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடுகள் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுவருகிறது. இ;நநிலையில் கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கமைய மாணவர்களை வகுப்பு பிரிவுகளில் இணைத்துக்கொள்வது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் வலயகல்வி பணிப்பாளர்களுடாக குறித்த விடயம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 24, 2019 15:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க