fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தாக்கு விஜயம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 24, 2019 14:57

இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தாக்கு விஜயம்

பாகிஸ்தானுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இன்று தாயகத்திலிருந்து புறப்பட்டு சென்றது.

இந்த தொடரில் 3 ஒருநாள்போட்டிகள் மற்றும் 3 20-20 போட்டிகள் இடம்பெறவுள்ளன. இந்த மாதம் 27, 29, ஒக்டோபர் 02 ஆகிய திகதிகளில் கராச்சி மைதானத்தில் ஒருநாள் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. 20 இற்கு 20 போட்டிகள் ஒக்டோபர் 5, 7 , 9 ஆகிய தினங்களில் லாகூர் கடாபி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

2009 ஆம் ஆண்டு இலங்கை அணி மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் பின்னர் முதல் முறையாக இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இலங்கை அணிக்கு ஆசிர்வாதம் வழங்கும் மத நிகழ்வொன்றும் இலங்கை கிரிக்கட் நிருவகத்தில் ஏற்பாடு’ செய்யப்பட்டிருந்தது. இலங்கை ஒருநாள் அணி தலைவராக லஹிரு திரிமான்ன செயல்படவுள்ளதோடு தசுன் சானக, 20 இற்கு 20 அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 24, 2019 14:57

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க