fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் வெள்ள பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 24, 2019 14:36

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் வெள்ள பாதிப்பு

உலகின் பல நாடுகளில் நிலவும் மோசமான காலநிலையினால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலும் கிழக்கு பீனிக்ஸ் பிரதேசத்திலும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று காலையிலிருந்து பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக பல பகுதிகளில் மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளது. இதனால் எண்ணாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ளோரை மீட்பதற்காக உலங்கு வானூர்திகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்திலும் கடும் மழை காரணமாக வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளத. இமெல்டா சூறாவளி டெக்ஸாஸ் மாநிலத்தில் நுழைந்தமை காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்களில் ஐவர் மரணமடைந்துள்ளனர். இதன் காரணமாக டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள பல வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. 800 இற்கும்மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஹூஸ்டன் பிரதேசத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடக்கு கரோலினா பிராந்தியத்தில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டதுடன் பல பகுதிகளில் மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

இதேவேளை ஹொங்கொங் இராச்சியமும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. பல கட்டிடங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 24, 2019 14:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க