இலங்கைக்கு மேற்கு, தெற்கு, மற்றும் தென்கிழக்காக அமைந்துள்ள கடற்பரப்புகளில் காணப்படும் இயங்குநிலை மேகக்கூட்டங்கள் காரணமாக மேற்குறிப்பிட்ட கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, திடீரென்று கடல் கொந்தளித்தல், காற்றின் வேகமானது அவ்வப்போது 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை திடீரென்று அதிகரித்தல் போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.