குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை வழமைக்கு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 23, 2019 12:06

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை வழமைக்கு

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு விநியோக பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டு பணிப்பாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊழியர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இன்று முற்பகல் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோக ஒருநாள் சேவைகள் ஸ்த்தம்பிதம் அடைந்தன. இதன்காரணமாக சேவையைப்பெறுவதற்கென வருகை தந்திருந்த மக்கள் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒருநாள் சேவைகள் மந்தகதியில் இடம்பெற்றதால் அங்குவந்த பொதுமக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து திணைக்களத்தின் வளாகத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்நிலையில் பொலிசாரின் உதவியுடன் நிலமை சீர் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டு பணிப்பாளர் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொழிற்சங்க செயற்பாடுகள் குறித்து தமக்கு எந்தவொரு முன்னறிவுப்பும் விடுக்கப்படவில்லையென குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தீர்மானமொன்று எடுக்கப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 23, 2019 12:06

Default