தேசிய பாடசாலைகளில் மாணவர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கென நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய பாடசாலைகளில் சுமார் 40 ஆயிரம் மாணவர்களை உள்வாங்குவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.ரட்நாயக்க தெரிவித்தார். முதற்கட்டநேர்முக பரீட்சைகள் மூலம் நான்காயிரத்து 500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, எஞ்சிய மாணவர்கள் ஏனைய நேர்முகப் பரீட்சைகள் மூலம் தெரிவு செய்யப்படுவர் என கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் எம். எம்.ரட்நாயக்க மேலும் தெரிவித்தார்.

தேசிய பாடசாலைகளில் மாணவர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை
படிக்க 0 நிமிடங்கள்