fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடந்த 13 ம் திகதி காணமல் போயிருந்த இரட்டை சிறுமிகள் தனாகம பகுதி வீடொன்றில் வைத்து கண்டுபிடிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2019 18:14

கடந்த 13 ம் திகதி காணமல் போயிருந்த இரட்டை சிறுமிகள் தனாகம பகுதி வீடொன்றில் வைத்து கண்டுபிடிப்பு

கடந்த 13 ம் திகதி காணமல் போயிருந்த ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த இரட்டை சிறுமிகள் தனாகம பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மாவனெல்ல பொலிசார் சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். இதன்போது வீட்டிலிருந்த 21 வயதான இளைஞர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண்குணசேகர தெரிவித்தார்.

14 வயதான குறித்த சிறுமிகள் வீட்டிலிருந்து வெளியேறி சென்றதாக சிறுமிகளின் தந்தையின் சகோதரர் ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தார். சிறுமிகள் ஹிக்கடுவையிலிருந்து பொலன்னறுவைக்கு சென்று மீண்டும் மாவனெல்லைக்கு சென்றுள்ளதாக சிசிடிவி காணொளிகளை ஆராய்ந்ததன் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2019 18:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க