பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய 26 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா போன்ற சர்வதேச பயங்கரவாத குழுக்கள் தொடர்பான கணக்குகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன. நியூஸிலாந்திலுள்ள மசூதி ஒன்றில் கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
இது சமூக வலைதளங்களின் தொழில்நுட்பத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாக கருதப்படுகிறது. இதனையடுத்தே பயங்கரவாதக் குழுக்களின் பேஸ்புக் கணக்குகளை நீக்குவதற்கு தீர்மானித்ததாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.