அரசியல் பழிவாங்கலுக்குள்ளான மேலும் 500 பேருக்கு இன்று நட்டஈடு வழங்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் அலரி மாளிகையில் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
1994ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியை இழந்த நாளிலிருந்து 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி வரை ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பல்வேறு அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகியுள்ளனர். அதற்கமைய உடல் ரீதியாகவும் சொத்து ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்ட நபர்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு புனர்வாழ்வு அதிகார சபை மற்றும் ஏனைய அரச அதிகாரிகளின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அந்த பட்டியலிலுள்ள மேலும் 500 பேருக்கு இன்று நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஏனையோருக்கும் கட்டம் கட்டமாக நட்டஈடு வழங்கும் நடவடிக்கை இடம்பெறுமென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார தெரிவித்தார்;.