அரச நிறுவனங்களில் தகமையுள்ள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அனுமதி
Related Articles
தகைமைகளை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்காலிக, ஒப்பந்தம், பதில் ஊழியர்களாகவும் நிவாரண அடிப்படையிலும் அரச நிறுவனங்களில் 180 நாட்களுக்கும் மேலாக தொழில் புரிகின்ற ஊழியர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இவ்வருடம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியுடன் 180 நாட்களை பூர்த்தி செய்த ஊழியர்கள் குறித்து இதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றுநிரூபத்தை அமுல்படுத்துவதற்கான ஒன்றிணைந்த யோசனையாக இது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கமைய 180 நாட்களை பூர்த்தி செய்த ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.