fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இஸ்ரேலின் பொதுத்தேர்தல் இன்று

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2019 14:49

இஸ்ரேலின் பொதுத்தேர்தல் இன்று

இஸ்ரேலின் பொதுத்தேர்தல் இன்று இடம்பெறுகிறது. ஐந்து மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலில் எந்தவொரு தரப்பிற்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு மீண்டுமொரு தேர்தலை நடத்த தீர்மானித்தார். அதற்கமைய 120 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான இத்தேர்தலில் 31 கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதேவேளை இஸ்ரேல் வரலாற்றில் ஒரு வருடத்திற்குள் இரண்டு முறை பொதுத்தேர்தல் நடைபெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாக அமைந்துள்ளது. இதனிடையே தேர்தலுக்கு முன்னர் சில கருத்துக்கணிப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு பெரும்பான்மையை பெறுவாரென சில கருத்துக்கணிப்புகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் எந்தவொரு தரப்புக்கும் இம்முறையும் பெரும்பான்மை கிடைக்காதெனவும் சில கருத்துக்கணிப்புகள் தெரிவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2019 14:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க